திருவள்ளூர்: டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பொன்னெரி அருகே தச்சூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
டாஸ்மாக் கடையின் ஷட்டரில் துளையிட்டு கொள்ளையடிக்க இளைஞர் முயன்றுள்ளார். இதனிடையே, அந்த பகுதியில் கவரைப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, டாஸ்மாக் கடையின் ஷட்டரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் விரட்டி பிடித்தனர். அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் வினோத் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.