தூத்துக்குடி: அரிவாளுடன் சுற்றித் திரிந்த 2 ரவுடிகள் கைது
சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் சாத்தான்குளம், பேய்குளம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சாத்தான்குளம் பேய்குளம் பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கையில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா சிங் (வயது 42) என்பவரை மேற்சொன்ன போலீசார் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கயத்தாறு செட்டிகுறிச்சி பகுதியில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை(51) என்பவரை போலீசார் கைது செய்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் மற்றும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மேற்சொன்ன நபர்களில் ராஜாசிங் மீது ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும், செல்லதுரை மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.