தூத்துக்குடி: வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மேஜை டிராயரில் இருந்த ரூ,6,500-ஐ திருடியுள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அன்னலட்சுமி (வயது 50). இவர் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மேஜை டிராயரில் இருந்த ரூ,6,500-ஐ திருடியுள்ளார்.
அப்போது கண்விழித்து பார்த்த அவர் கூச்சலிட்டுள்ளார். சுதாரித்து கொண்ட மர்மநபர், அவரது கழுத்தில் கிடந்த 4 கிராம் தாலி சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து விசாரித்து வருகிறார்.