திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி, கொண்டாநகரத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 33) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஒன்றரை (1½) மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், கணேசனுக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கணேசனை சீதபற்பநல்லூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.