திருப்பூர்: பக்தர்கள் சென்ற பஸ் லாரி மீது மோதி விபத்து - 10 பேர் காயம்

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: பக்தர்கள் சென்ற பஸ் லாரி மீது மோதி விபத்து - 10 பேர் காயம்
Published on

திருப்பூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக 60 பேர் கொண்ட குழுவினர் சொகுசு பஸ்சில் பயணம் செய்தனர். இந்த சொகுசு பஸ்சானது இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தது. அதேபோல், கர்நாடகாவில் இருந்து மக்கா சோளம் எற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் அதே சாலையில் முன் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்து காரணமாக 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து கிரேன் உதவியுடன் பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்து காரணமாக அந்த தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com