கோவையில் முதலீட்டாளார்கள் மாநாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்
158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றுள்ளார். அவர் காந்திபுரத்தில் 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், செம்மொழி பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்பட 150 பேருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இந்நிலையில், தமிழ்நாடு தொழில்துறை சார்பில் டி.என்.ரைசிங் என்ற நிகழ்ச்சி கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 43 ஆயிரத்து 843 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 709 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.