தவெகவில் செங்கோட்டையன்: கருத்து சொல்ல ஒன்றுமில்லை - எடப்பாடி பழனிசாமி பதில்

என்னை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சரியாக காய் நகர்த்திவிட்டார் என செங்கோட்டையன் கூறினார்.
தவெகவில் செங்கோட்டையன்: கருத்து சொல்ல ஒன்றுமில்லை - எடப்பாடி பழனிசாமி பதில்
Published on

சென்னை,

தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன் விஜயின் கட்சிக்கு மக்கள் மனதில் ஆதரவு கிடைத்துள்ளது; மக்கள் மனதில் விஜய் இடம்பிடித்து விட்டார்.அதிமுக தொடங்கிய போது, 100 நாட்கள் கூட ஓடாது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால், மூன்று முறை எம்ஜிஆர் முதலமைச்சராக அமர்ந்தார்.மறையும் வரை நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாறு படைத்தார்.

நேர்மையான, தூய்மையான ஆட்சியை நடத்த ஒருவர் தேவை என மக்கள் நினைக்கின்றனர் திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான். இரண்டும் இணைந்துதான் பயணிக்கின்றன. இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டி போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. 3ஆவது கட்சி வேண்டும். எங்கள் கட்சியில் சேர வேண்டும் என திமுகவோ, மாற்றுக்கட்சியோ, பாஜகவோ என்னை அணுகவில்லை. தூய்மையான ஆட்சி வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். என்னை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சரியாக காய் நகர்த்திவிட்டார் எனதவெகவில் இணைந்த செங்கோட்டையன் கூறினார்.

த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் கூறிய கருத்து குறித்து மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஒருவர் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது. ஜனநாயக நாட்டில் அவரவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. அவர் அதிமுகவில் இல்லை. அவரை பற்றி கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com