தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தின்போது காவலரின் கையை கடித்த தவெக தொண்டர்

தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.;

Update:2025-12-07 17:30 IST

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில், அதையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முயன்றதால், போலீசாருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தநிலையில், போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது, அங்கே இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவர், தடுத்து நிறுத்திய காவலர் ஒருவரின் கையைப் பிடித்துக் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தவெக தொண்டர்களுக்கு சுய கட்டுப்பாடு, சுயஒழுக்கம் என்பது மிக அவசியம் என பல அரசியல் கட்சி தலைவர்களும் கூறிவரும் நிலையில், இச்சம்பவம் மீண்டும் அவர்களின் ஒழுக்க கட்டுப்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்