'தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்'- புஸ்ஸி ஆனந்த் பேச்சு
'தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்' என த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.;
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது:-
நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. எண்ணற்ற சோதனைகளை சந்தித்து வந்திருக்கிறோம். பல தடைகளை தாண்டி வந்திருக்கிறோம். தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய் தான்.த.வெ.க.தொடங்கப்பட்டு 2 வருடம் 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த கணக்கு அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு நாம் அளித்தது. ஆனால் விஜய்யின் உழைப்பு, உங்களின் அர்ப்பணிப்பு, மக்களோடு நமக்கு இருக்கின்ற பாசம் 30 ஆண்டுகளை தாண்டி விட்டது. இவை அனைத்துக்கும் அடித்தளம் விஜய் மட்டும் தான்.
அவரது வழிகாட்டுதலும், தியாகமும் மிகவும் பெரியது. 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த மண்ணோடும், மக்களோடும் மாறி உள்ள மாபெரும் தலைவர் தான் விஜய். யாரும் இவரை எளிதில் அசைத்து பார்க்க முடியாது. ஏனென்றால் இவர், மக்களின், தாய்மார்களின், தமிழ் மண்ணின் நம்பிக்கை. த.வெ.க. சாதாரண கோட்டை அல்ல.தொண்டர்களின் தியாகத்தால் கட்டப்பட்ட இரும்பு கோட்டை. இனிமேல், தலைவர் கை காட்டும் திசையில் பல மடங்கு பலத்துடன், புதிய வேகத்துடன் நாம் செயல்பட போகிறோம்.தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அந்த மாற்றத்தை கொடுக்கும் தகுதியும், நேர்மையும் கொண்ட ஒரே கட்சி தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்” இவ்வாறு அவர் பேசினார்.