குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய்

பெண் நிர்வாகிகள் பலர் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர்;

Update:2025-11-05 22:25 IST

சென்னை ,

த.வெ.க. பொதுக்குழு இன்று நடைபெற்றது. த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விஜய்யின் தாயார் ஷோபா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பெண் நிர்வாகிகள் பலர் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் குழந்தைகளுடன் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் தனது கைக்குழந்தையுடன் கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்குழு முடிந்து மேடையில் இருந்து இறங்கிய விஜய்யிடம், பெண் நிர்வாகி தனது குழந்தையை விஜய்யிடம் கொடுத்து பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து குழந்தையை பெற்றுக்கொண்ட விஜய், 'மோஷிதா' என அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார். இதைத்தொடர்ந்து குழந்தையின் தாயார் மற்றும் உறவுக்கார பெண் அகமகிழ்ந்து விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்