காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவராக வர விஜய் விரும்பினார்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.

த.வெ.க. தலைவர் விஜய், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.;

Update:2025-11-19 13:07 IST

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க.வும் போட்டியிட தயாராகி வருகிறது. அதற்கேற்ப ஆட்சியில் பங்கு என அவர் அறிவித்தது, கூட்டணி கட்சிகளை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சியாக பார்க்கப்பட்டது. எனினும், தொடக்கத்தில் இருந்து, பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்றும் தி.மு.க.வை அரசியல் எதிரி என்றும் பேசி வருகிறார்.

Advertising
Advertising

இதனால், அக்கட்சிகளுடன் கூட்டணிக்கான சாத்தியம் குறைவு என பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. மீது விஜய் எந்தவொரு பெரிய விமர்சனமும் வைக்கவில்லை. எனவே விஜய் அ.தி.மு.க.வுடன் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்பட்டது.

ஆனால், ஆட்சியில் பங்கு, முதல்-அமைச்சர் பதவி போன்றவற்றால், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இணையும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், அ.தி.மு.க.வையும், விஜய் விமர்சிக்க தொடங்கினார்.

இந்நிலையில், தேசிய அரசியலில் கால்தடம் பதிப்பதற்கும் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியே கொண்டு வந்து அவர்களோடு இணையலாம் என்ற நோக்கில் அவர் ராகுல் காந்தியுடன் பேசினார் என கூறப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறும்போது, த.வெ.க. தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. சில வருடங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவராக வர விஜய் விருப்பப்பட்டார்.

சட்டசபை தேர்தலில் விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். வாக்குகள் வெற்றியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என கூறினார். சட்டசபை தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்துவார் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்