விஜயதசமியை முன்னிட்டு ஈஷா லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

லிங்கபைரவி வளாகத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2025-10-02 19:04 IST

விஜயதசமியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (02/10/25) நடைபெற்றது. ஈஷாவை சுற்றியுள்ள முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார்கோவில்பதி, மடக்காடு உள்ளிட்ட பழங்குடியின கிராமத்து குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் பெற்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் லிங்க பைரவியை வழிபட்டு, பின்னர் தங்கள் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கும் வகையில் எழுத பழகி கொடுத்தனர்.

 

மேலும் ஆதியோகி, தியானலிங்கம் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று ஈஷாவிற்கு வருகை புரிந்தனர்.

ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் சுற்றிவட்டார கிராமங்களில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு தொடர்பான விழிப்புணர்வு, ஊட்டச்சத்து தொகுப்புகள், மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதனுடன் லிங்கபைரவி வளாகத்தில் அவர்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மேலும் ஈஷா வித்யா பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் அவர்கள் உயர்கல்வி மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்