‘நாங்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாக பழகி வருகிறோம்’ - நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றத்தில் கோர்ட்டு உத்தரவின்படி தீபம் ஏற்ற அனுமதி அளித்திருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-07 15:13 IST

சென்னை,

சென்னை வடபழனியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நல்ல மனிதர், ஆனால் அவரது ஆட்சியைப் பற்றி என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. அவர்கள் இஸ்லாமியர்களுடன் அங்காளி, பங்காளிகளாக பழகலாம். ஆனால் நாங்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாக பழகி வருகிறோம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொறுத்தவரை கோர்ட்டு உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருக்க வேண்டும். மாறாக 144 தடை உத்தரவு போடுவது என்பது கோர்ட்டை அவமதிப்பது போன்றதாகும். அதுமட்டுமின்றி, தீபம் ஏற்றுவதால் எந்த இஸ்லாமிய மக்களுக்கும் வருத்தம் இல்லை.

பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் தீபாவளிக்கு பிறகு கார்த்திகை தீபத் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மக்களை சந்தோஷப்படுத்துவதற்கு பதிலாக 2026 தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இஸ்லாமியர்களை வாக்கு வங்கிக்காக முதல்-அமைச்சர் பயன்படுத்துகிறார்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்