மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது: எப்படி பந்து வீசினாலும் சிக்சர் அடிப்போம்- மு.க.ஸ்டாலின்

வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.;

Update:2025-12-07 13:29 IST

மதுரை,

மதுரையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: சமூகத்தை துண்டாடும் சதிச் செயலில் ஈடுபடுவது ஆன்மிகம் அல்ல.. கேடு கெட்ட மலிவான அரசியல். வன்முறையை தூண்டக் கூப்பிட்டால், மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் . “ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவறான தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் இது. நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால் அவர்கள் வேறு அரசியலைப் பேசுகின்றனர். நான் உறுதியாகச் சொல்கிறேன்.அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவற்றை முறியடிப்போம். சிதைப்போம்.

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அந்த பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது. சில கட்சிகளுக்கு எப்போதும் கலவர சிந்தனைதான் இருக்கிறது. திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பிரிவினையை தூண்டி சமூகத்தை துண்டாடும் செயல்கள் உண்மையான ஆன்மிகம் அல்ல. வளர்ச்சி திட்டங்க்ளை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள். எப்படி பந்து வீசினாலும் சிக்ச்ர் அடிப்போம். பொட்டியில் சாம்பியன் நாங்கள்தான். மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது. பாஜகவுக்கு தோதான அடிமைகள் சிக்கலாம், புதிய அடிமைகள், பழைய அடிமைகள் பி டீம் , சி டீம் உருவாகலாம். இறுதியில்சாம்பியன் ஆகப்போவது நாங்கள்தான்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்