தொடர் சாலை விபத்துகளுக்கான காரணிகளை அறிந்து தீர்வு காண வேண்டும் - நயினார் நாகேந்திரன்

தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. தென்காசியில் நடந்த உயிரிழப்புகளின் ரணம் ஆறும் முன்பே, மீண்டுமொரு பெரும் விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் முழு குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இத்தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இதற்கான காரணிகளை அறிந்து, அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமெனவும் திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com