பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: உதயநிதி ஸ்டாலின்
படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நமது நாட்டைப் பாதுகாக்கும் முப்படை வீரர்களின் வீரத்தைப் போற்றிடும் வகையிலும், போரில் தியாகம்புரிந்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் உதவிடும் வகையிலும், கொடி நாள் நிதிக்கான நன்கொடை அளித்தோம்.
நாட்டிற்குள் நாம் நல்வாழ்வு வாழ, தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையைப் பாதுகாக்கும் படை வீரர்கள் என்றென்றும் நமது நன்றிக்குரியவர்கள்.
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்.படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என தெரிவித்துள்ளார்.