தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்: பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.;

Update:2026-01-10 11:49 IST

சென்னை,

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

“பொங்கல் விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனக்கு எனர்ஜி கிடைக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்களே அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள். இன்று பாஜகவில் இருக்கிறவர்கள் கூட, திமுகவினரை போல யாராலும் வேலை செய்ய முடியாது என கூறுகிறார்கள்.

50 சதவீத தேர்தல் பணிகளை நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீத தேர்தல் பணிகள்தான் நிலுவையில் உள்ளது. நாம் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று நான் ஏற்கெனவே கூறி இருந்தேன். ஆனால், நீங்கள் ஆற்றும் பணிகளை பார்க்கும்போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு தோன்றுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம்.”

இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

மேலும் செய்திகள்