தை பிறந்தால் வழி பிறக்கும்: ஓ பன்னீர் செல்வம் பேட்டி
தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.;
சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், ஓ பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வத்திடம் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார். தவெக உடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்