கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அணிவகுப்பு: பொதுமக்கள் அச்சம்

கடந்த மாத இறுதியில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது.;

Update:2025-07-21 14:31 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி எல்லமலை வனப் பகுதியில் பசும் புல்வெளிகளில் காட்டு யானைகள் அணிவகுப்பு நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாடந்தொரை பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தின. இதற்கிடையே, கடந்த மாதம் இறுதியில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதனால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வனப்பகுதிக்குள் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். வனத்துறையினரும் டிரோன்கள் மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது எல்லமலை வனப் பகுதியில் பசும் புல்வெளிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அணிவகுப்பு நடத்தி வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்