கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பா...? ஜி.கே. வாசன் பதில்

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு இன்றைக்கு தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.;

Update:2025-11-19 14:02 IST

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டு உள்ள அறிக்கையில், மத்திய அரசு கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரித்ததாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. பிரதமர் மோடியின் தலைமையிலான தமிழக வளர்ச்சிக்கான மத்திய அரசின் திட்டங்களில் கோவை, மதுரை மெட்ரோ திட்டமும் பயன்பாட்டிற்கு வரும். மக்கள் நலன் காக்கும்.

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்படுவதாக வெளிவரும் செய்திகள் தவறானவை. கோவை, மதுரை மாநகராட்சிகளின் மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளதாக உண்மையான தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertising
Advertising

குறிப்பாக மெட்ரோ திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்து திட்டத்தை தொடர்வோம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதே உண்மையான செய்தி. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களானது மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு நிறுத்த வாய்ப்பில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.

இப்படி இருக்கும்போது, மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சியை பல்வேறு துறைகளிலே உறுதிப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழக அரசு கண்மூடித்தனமாக குறை கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு இன்றைக்கு தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

அந்த வகையில் கோவை, மதுரை மாநகராட்சிகளில் மெட்ரோ ரெயில் சேவை திட்டமானது விரைவில் தொடங்கப்படும். எனவே கோவை, மதுரை மெட்ரோ ரெயில் சேவையும் மத்திய அரசின் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களில் ஒன்றாக அமைந்து மக்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக அமையும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்து கொள்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்