தவெகவில் இணைகிறேனா? மறுக்காத செங்கோட்டையன்

அதிமுகவுக்காக உழைத்த எனக்கு தரப்பட்ட பரிசு உறுப்பினர் பதவி நீக்கம் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.;

Update:2025-11-25 19:37 IST

கோவை,

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் 27-ம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவ்ல் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சேருவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், கோவையில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

50 ஆண்டுகள் அதிமுகவில் உழைத்த நான், மன வேதனையில் இருக்கிறேன். எனது மன வேதனை அனைவருக்கும் நன்றாக தெரியும். 50 ஆண்டுகாலமாக அதிமுகவுக்காக உழைத்த எனக்கு தரப்பட்ட பரிசு அடிப்படை உறுப்பினர் பதவி நீக்கம். அதிமுகவில் இருந்து உறுப்பினர் நீக்கத்தால் அடைந்த மனவேதனையில் உள்ளேன். நீங்கள் (கே.ஏ.செங்கோட்டையன்) தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்