கோவில்பட்டியில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

கோவில்பட்டி, இந்திராநகரைச் சேர்ந்த ஒருசர் தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.;

Update:2025-08-02 13:03 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இந்திராநகர் 3வது தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் மாடசாமி (வயது 54), தள்ளுவண்டியில் துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த ஒரு ஆண்டு காலம் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மன அழுத்தத்தில் சாகப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கடம்பூர்- கோவில்பட்டி ரெயில் நிலையம் இடையே திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரெயில் முன் நின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ெரயில்வே நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்