இன்ஸ்டாகிராமில் பழகி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.;

Update:2025-12-09 05:52 IST

திருப்பூர்,

உத்தரபிரதேசத்தை சேர்ந்த தம்பதி திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகள் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் அந்த மாணவிக்கு, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் (வயது 19) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதனால், சஞ்சய்குமார் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மாணவி 3 மாத கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சய்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்