நெல்லையில் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

பாப்பாக்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிராம் கஞ்சாவை வாலிபர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
நெல்லையில் விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Published on

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல் துறையினர் நேற்று (10.5.2025) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகாமிபுரம் பெட்ரோல் பங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கீழபாப்பாக்குடி, வாட்டர்டேங்க் தெருவை சேர்ந்த சுடலை (வயது 19) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 30 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுடலையை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com