உரிமம் இன்றி பட்டாசு விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.;

Update:2026-01-20 20:50 IST

தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (வயது 32) என்பவர் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசு வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சேரகுளம் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து சுந்தரவேலை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து உரிமம் இன்றி விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்