தூத்துக்குடியில் மது விற்ற வாலிபர் கைது: 145 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2025-09-10 20:43 IST

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தையாபுரம் வடக்கு தெருவில் உள்ள டீக்கடை முன்பு சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அந்த பையில் மதுபான பாட்டில்கள் இருந்தது.

விசாரணையில் அவர் தங்கமணிநகர் 4வது தெருவை சேர்ந்த அழகர் மகன் முனியசாமி (வயது 38) என்பதும், கடைகளில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து முனியசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 145 மது பாட்டில்கள் மற்றும் ரூ.2,650 ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முனியசாமி மீது சட்ட விரோத மது விற்பனை, திருட்டு, அடிதடி என மொத்தம் 6 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்