கோவில்பட்டியில் வாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் வாளுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திராநகர், பெருமாள் கோவில் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவரது முதுகின் பின்னால் சட்டையில் ஒரு வாள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் கோவில்பட்டி வள்ளுவர்நகர், 3ஆவது தெருவைச் சேர்ந்த சிங்கராஜ் மகன் பிரபு (வயது 28) என்பதும், முன்விரோதம் காரணமாக பழிக்குப்பழி வாங்குவதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com