தூத்துக்குடியில் மதுபான கடையில் திருட்டு: வாலிபர் கைது
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த வாலிபர் மதுபான கடையில் பணத்தை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.;
தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கன்னி நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் கனிராஜா (வயது 55), பூப்பாண்டியாபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகில் மதுபான கடை நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி கடையை பூட்டிவிட்டு சென்ற பின்னர் மறுநாள் பகல் 12 மணிக்கு வந்து கடையை திறந்துள்ளார். அப்போது கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். அதில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சக்திவேல் (வயது 28) பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.