தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
எப்போதும்வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமத்தில் வாலிபர் ஒருவர், தனது வீட்டில் தண்ணீர் மோட்டார் சுவிட்சை போடும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் மகாராஜா (வயது 24). இவர் நேற்று தனது வீட்டில் தண்ணீர் மோட்டார் சுவிட்சை போடும்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.