திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.3.5 கோடி மோசடி - நடன அழகி மீது இளைஞர் புகார்
வேறு ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பிரீத்தி தன்னை ஏமாற்றியதாக பிரிட்டோ கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டை சேர்ந்த பிரிட்டோ லாரன்ஸ் சேவியர் என்பவர், சிங்கப்பூரில் தொழிலதிபராக உள்ளார். இவரிடம், நடன அழகி பிரீத்தி என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார். சிங்கப்பூரில் கிளப்பில் நடனமாடும் பிரீத்தி, பிரிட்டோவை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக தெரிகிறது.
ஆனால், அவர் தற்போது திருமணத்திற்கு மறுப்பதாக கூறி பிரிட்டோ லாரன்ஸ் சேவியர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சுமார் ரூ.3.5 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு பிரீத்தி மோசடி செய்ததாக தனது புகாரில் பிரிட்டோ கூறியுள்ளார். மேலும், வேறு ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பிரீத்தி தன்னை ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரிட்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.