தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

13-12-2025 மற்றும் 14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு

இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

15-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்:

13-12-2025 முதல் 15-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும், சற்று குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

13-12-2025 முதல் 15-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com