வடதமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும்: தமிழ்நாடு வெதர்மேன்

வட தமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-10 12:00 IST

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வட தமிழகம் மற்றும் சென்னையில் குளிர் அலை உருவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

”வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுறுவல் ஏற்படும். இதனால் மத்திய இந்தியா முழுவதும் சிறிய குளிர் அலைகள் போன்ற சூழலை உருவாக்கும். இதன் தாக்கம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், வடதமிழகத்திலும் உணரப்படும். பெங்களூரு மற்றும் ஓசூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10-12 டிகிரி செல்சியஸாக குறைந்து காணப்படும்.

இந்தச் சமயத்தில் உதகை, கொடைக்கானலில், 5 டிகிரி செல்சியஸுக்கு கீழே செல்ல வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வறண்ட மற்றும் குளிரான வானிலை நிலவும். டிசம்பர் மாத வானிலையானது, மேற்கு கடற்கரை நகரப் பகுதியில், இயல்புக்கு மாறாக அதிக வெப்பம் நிலவும்” என்று குறிப்பிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்