27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பில்லை - வானிலை மையம்

சென்னையில் 29-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-11-25 16:40 IST

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்தநிலையில், 18 மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்படையும் 72 இடங்கள் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

26, 27ஆம் தேதிகளில் புயல் உருவாகும் என கூறியிருந்த நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல், அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (நவ.25) உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் . மலாக்கா ஜலசந்தியில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் (தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், வடக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும்) மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27-ம் தேதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஆகும்.

28ம் தேதி கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்கள்.

29ம் தேதி ஆரஞ்சு அலெர்ட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 30ம் தேதி  கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

விழுப்புரம்,திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, வேலூர், சென்னை,திருவள்ளூர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்