சென்னையில் இரவு முதலே விட்டு விட்டு பெய்யும் மழை

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.;

Update:2026-01-01 06:55 IST

சென்னை,

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் இரவு  முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதாவது, நேற்றிரவு 11.30 மணிக்கு லேசாக தொடங்கிய மழை, நள்ளிரவில் வேகமெடுத்தது. பின்னர் 3.30க்கு நின்ற மழை, தற்போது லேசாக பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்