சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

சென்னையின் வடக்கு புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.;

Update:2025-11-06 19:22 IST

சென்னை,

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், நுங்கம்பாக்கம், பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, மாதவாம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், வடக்கு புறநகர் பகுதிகளான எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்