13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com