தமிழகத்தில் 14-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தீவிரமாக இருந்தது. தற்போது மழையின் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 14-ந்தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.