இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது;

Update:2025-12-31 19:47 IST

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இரவு 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்