இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது பஸ் கவிழ்ந்து விபத்து - 25 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா.;

Update:2025-08-10 21:56 IST

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள காகமெகா நகரை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று பஸ்சில் கிசுமு நகருக்கு சென்றார். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அனைவரும் அதே பஸ்சில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

கிமுசா நகரை தாண்டி சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது பஸ் விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்