வியட்நாமில் பஸ் கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வியட்நாமில் பஸ் கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
Published on

ஹனேய்,

வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பஸ் ஹா டின் மாகாணத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் நிலை தடுமாறி சாலையை விட்டு விலகி, போக்குவரத்து அடையாள பலகைகளில் மோதி, கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனையடுத்து விபத்தில் சிக்கி காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியட்நாமில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com