ஜெர்மனியில் இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

அடுத்த ஆண்டில் மேலும் 20 ஆயிரம் பேரை ராணுவத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.;

Update:2025-12-07 22:02 IST

பெர்லின்,

உக்ரைன்-ரஷியா போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷிய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே ரஷியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த சேவை ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும். போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதன்மூலம் அடுத்த ஆண்டில் மேலும் 20 ஆயிரம் பேரை ராணுவத்தில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கட்டாய ராணுவ சேவை முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆட்சியில் 2011-ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்