வாடிகனில் ‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ - போப் லியோ பங்கேற்பு

ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர்.;

Update:2025-12-07 15:49 IST

ரோம்,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் ‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ என்ற பெயரில் இசைத் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் போப் லியோ பங்கேற்று, இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தார். முன்னதாக போப் பிரான்சிஸ் முயற்சியால் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சி, தற்போது 6-வது ஆண்டாக உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது.

கனடாவை சேர்ந்த மைக்கேல் பப்லே உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசைக்கச்சேரிகளை அரங்கேற்றினர். வீடற்ற மக்கள், புலம்பெயர்ந்தோர், சிறப்பு அனுமதி பெற்ற சிறைக் கைதிகள் உள்ளிட்டோருக்கு இசை அனுபவத்தை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி குறித்து போப் லியோ பேசுகையில், “இது ஒரு சாதாரண இசை நிகழ்வு அல்ல. அதை விட மிகச்சிறந்த செயல். ஆன்மீக இசை ஆன்மாவை உயர்த்தக் கூடியது. மனித கண்ணியம் என்பது பொருளாதாரத்தை சார்ந்தது அல்ல. நாம் அனைவரும் கடவுளால் நேசிக்கப்படும் குழந்தைகள்” என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்