இங்கிலாந்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் - மறுபரிசீலனை செய்ய அரசு வலியுறுத்தல்

போராட்ட குழுவினருடன் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.;

Update:2025-12-03 06:08 IST

லண்டன்,

இங்கிலாந்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள டாக்டர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்ட குழுவினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

எனவே இந்த மாதம் மேலும் 5 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் அவர்கள் நடத்தும் 14-வது வேலை நிறுத்த போராட்டம் இதுவாகும். நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு போராட்ட குழுவினரை அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்