தாய்லாந்தை தொடர்ந்து இந்தியர்கள் கம்போடியாவுக்கும் செல்ல வேண்டாம் - தூதரகம் அறிவுறுத்தல்

தாய்லாந்தை தொடர்ந்து இந்தியர்கள் கம்போடியாவுக்கும் செல்ல வேண்டாம் என்று தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.;

Update:2025-07-27 06:23 IST

புதுடெல்லி,

தாய்லாந்து-கம்போடியா இடையே நிலவும் எல்லை மோதல் காரணமாக இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துகின்றனர். இந்த மோதலில் இருதரப்பிலும் பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது.

எனவே எல்லை பகுதியில் வசிக்கும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா. சபை இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே எல்லை பகுதியில் போர்ப்பதற்றம் நிலவுகிறது.

இதனால் இந்தியர்கள் யாரும் தாய்லாந்து செல்ல வேண்டாம் என தூதரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது இந்தியர்கள் கம்போடியாவுக்கும் செல்ல வேண்டாம் என தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் அங்கு வசிக்கும் இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ள +855 92881676 என்ற உதவி எண் மற்றும் cons.phnompenh@mea.gov.in. என்ற மின்னஞ்சலையும் இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்