சீன போர் விமானத்தை விரட்டியடித்த ஜப்பான் ராணுவம்
தைவான் விவகாரத்தில் தலையிட்டதாக கூறி ஜப்பானுக்கு சீனா சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.;
டோக்கியோ,
பசிபிக் கடற்பகுதியில் உள்ள ஒகினாவா தீவு அருகே ஜப்பானுக்கு சொந்தமான எப்-15 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது சீன கடற்படை கப்பலான லியோனிங்கில் இருந்து புறப்பட்ட ஜே-15 என்ற போர் விமானம் அதன் அருகே சென்றது. பின்னர் ரேடார் மூலம் ஜப்பான் விமானத்தை தாக்க முயன்றது.
இதனையடுத்து அங்கு விரைந்த ஜப்பானிய போர் விமானங்கள் அதனை விரட்டியடித்தன. சீனாவின் இந்த அத்துமீறலுக்கு ஜப்பான் ராணுவமந்திரி ஷின்ஜிரோ கொய்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனா தரப்பில் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. தைவான் விவகாரத்தில் தலையிட்டதாக கூறி ஜப்பானுக்கு சீனா சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசலுக்கு பிறகு தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டு உள்ளது.