இங்கிலாந்தில் கைதியுடன் தகாத உறவில் இருந்த பெண் அதிகாரிக்கு சிறை

பெண் அதிகாரி கைதிக்கு சிறையில் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது.;

Update:2025-12-07 21:52 IST

லண்டன்,

இங்கிலாந்தின் வெதர்பி நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் அதிகாரியாக இருந்தவர் மேகன் கிப்சன். இவர் சிறையில் இருந்த ஒரு கைதியுடன் தகாத உறவில் இருந்ததாக சக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பினர்.

அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த கைதிக்கு சிறையில் போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை லீட்ஸ் கிரவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதியானதால் மேகனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்