வியட்நாமில் பைக் விபத்து: இந்திய மருத்துவ மாணவன் பலி

அர்ஷித் நேற்று தனது நண்பருடன் கென் தொ நகரில் பைக்கில் சென்றுள்ளார்
வியட்நாமில் பைக் விபத்து: இந்திய மருத்துவ மாணவன் பலி
Published on

ஹனோய்,

ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த மாணவ, மாணவியர் பலர் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகள் பயின்று வருகின்றனர்.

இதனிடையே, தெலுங்கானா மாநிலம் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்ஷித் அஷ்ரித் (வயது 21). இவர் வியட்நாமின் கென் தொ நகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3ம் ஆண்டு கல்வி பயின்று வந்தார்.

இந்நிலையில், அர்ஷித் நேற்று தனது நண்பருடன் கென் தொ நகரில் பைக்கில் சென்றுள்ளார். பைக்கை அர்ஷித் ஓட்டினார். வேகமாக வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி சென்ற அர்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com