தாய்லாந்து பயணம் - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

தாய்லாந்து - கம்போடியா மோதல் காரணமாக தாய்லாந்து நாட்டில் 7 மாகாணங்களுக்கு இந்திய சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என தூதரகம் கூறியுள்ளது.;

Update:2025-07-25 14:15 IST

பாங்காக்,

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றன.

இந்நிலையில் நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து எப்16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது. தாய்லாந்து சுகாதார அமைச்சகம், ஒரு தாய்லாந்து வீரர் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைகள் இருந்து வருகிறது.

இந்தநிலையில், தாய்லாந்து, கம்போடியா எல்லையில் தொடரும் மோதல் காரணமாக தாய்லாந்து நாட்டில் 7 மாகாணங்களான உபோன் ரட்சதானி, பிரசாத் தா முயென் தோம், சிசாகெட், சோங் சாங் ப்ராக்யா பகுதிகளுக்கும் பான் க்லாங் லுயெக், பான் லேம் & பான் பாட் காட், டிராட்டுக்கு எல்லை பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்