கொலம்பியாவில் லாரி வெடிகுண்டு, ஹெலிகாப்டர் வெடித்து 17 பேர் பலி

போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று நாட்டின் வடக்கே சுட்டு வீழ்த்தப்பட்டது.;

Update:2025-08-23 13:47 IST

காலி,

கொலம்பியாவில் இரு வேறு சம்பவங்களில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் பலியாகி உள்ளனர். இதில், காலி நகரில் ராணுவ தளம் அருகே லாரி ஒன்றில் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் 5 பேர் பலியானார்கள்.

அதற்கு முன்பு போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று நாட்டின் வடக்கே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், 12 அதிகாரிகள் பலியாகி இருந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது.

அந்த ஹெலிகாப்டர், கொக்கைன் என்ற போதை பொருள் உற்பத்திக்கான கொகோவா இலை பயிர்களை அழிப்பதற்காக அமல்பி என்ற கிராமப்புற பகுதியில் இருந்து அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இதனை ஆன்ட்டியோகுவியா கவர்னர் ஆண்டிரிஸ் ஜூலியன் உறுதி செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்