காதலனுடன் உல்லாசம்.. வீட்டிற்குள் நுழைந்த மனைவி..10-வது மாடியில் இருந்து குதித்து தலைதெறிக்க ஓடிய கள்ளக்காதலி

10-வது மாடியில் இருந்து அறைகுறை ஆடையுடன் பால்கனி வழியாக குதித்து தொங்கியபடி பைப்பை பிடித்து பக்கத்துவீட்டில் உதவி கேட்டு உயிர் தப்பினார்.;

Update:2025-12-09 18:43 IST

பிஜீங்,

சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் ஒரு வீடியோவில், ஒரு பெண் 10-வது மாடி பால்கனியில் குதித்து தொங்கியடி, தப்பி ஓடுவது போன்ற காட்சி தெரிகிறது. இதை பார்த்தால் இதயத்துடிப்பு கூட அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

வீடியோவில், சட்டையில்லாத ஒரு ஆண் ஜன்னல் வழியாக அந்த பெண்மணியிடம் சிறிது நேரம் பேசியதை காணலாம். சில நொடிகளில் அவர் காட்சியில் இருந்து மறைந்துவிடுகிறார். இந்த சம்பவம் நவம்பர் 30-ஆம் தேதி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோவில் இருக்கும் பெண்மணியுடன் கணவன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அவரது மனைவி எதிர்பாராத விதமாக திடீரென வீட்டிற்கு விரைவாக வந்ததால் பீதியடைந்த கணவர், தன்னை மனைவி கண்டுபிடிக்காதவாறு இருக்க, அந்த பெண்மணியை பால்கனிக்கு ஏறி வெளியே நிற்கச் சொல்லியதாக கூறப்படுகிறது.. பின்னர் அந்த பெண், பால்கனியில் இருந்து தொங்கியபடியே இறங்கி மற்றொரு வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்கிறார். உள்ளே இருந்த நபர் அந்த பெண்ணை பத்திரமாக காப்பாற்றுவதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் அந்த வீடியோவுக்கு பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஒருவர், “அவர் ஸ்பைடர்மேன் குழுவில் உள்ளவர் போல இருக்கிறார் என்று நகைச்சுவையாகக் கருத்து பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பயனர், “ப்ளாட் ட்விஸ்ட்: அவளை காப்பாற்றும் நபர், அந்த மனிதனின் மனைவியிடம் ‘சரி, அவள் இங்கே இருக்கிறாள்’ என்று சொல்லி இருப்பார் என்று கிண்டலாக குறிப்பிட்டார். மூன்றாவது பயனர், அந்த பெண் இதுபோன்ற அனுபவம் கொண்டவரை போல தெரிகிறார் என்று பதிவிட்டார். மற்றொருவர், ஒரு ஆணுக்காக இப்படிப் பட்ட அவமானகரமான நிலைக்கு நீ உன்னை தள்ளிக் கொள்ள கூடாது. கொஞ்சம் மரியாதை வைக்கவும், மிஸ்…என்று அறிவுறுத்தும் கோபத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். இத்தகைய கருத்துகளுக்கு நடுவில், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே லைக்களை அள்ளி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்